Tuesday, October 21, 2008

இணை பிரியா இணைய நட்பு !!!

என் கவிதை ரசனைக்கு
நவரசமாய் கிடைத்தது - ஒரு
இணைய நட்பு!

கவிதைக்கு மட்டுமில்லை
நண்பா! - கலங்கிடாதே
கண்ணுக்குள் மணியாய்
இணை பிரியா நட்பு
இந்த இணைய நட்பு!!

"கருத்து வேறுபாடு ஒன்றும்
தடையில்லை நம் நட்புக்கு!"
கிடைத்த உன் நட்பு எனக்கு
பொக்கீஷம்
கடவுளுக்கே என் முதல் நன்றி!

கவியில் இன்னும் நடைபழகும்
குழந்தைதான் நான்! - ஆனாலும்
காத்திருந்து கிடைத்த உன் நட்புக்கு
தந்தேன் கவிதையை பரிசாய் உனக்கு!

சண்டை போடவா
நம் நட்பு??
இல்லை
திட்டிக்கொள்ளவா? -
இரண்டுமே நம் நட்பினை வெளிப்படுத்த
நாம் கூறிக்கொள்ளும்
சாக்குபோக்கு!!

-திருமதி. அஸ்மா


From : http://kavithaithokuppugal.blogspot.com

நீத்தார் பெருமை !!

நீத்தார் பெருமை !!
ஒழுக்கத்து நீத்தார் பெருமை விழுப்பத்து
வேண்டும் பனுவல் துணிவு. 1.3.1

ஒழுக்கத்தில் உறுதியான துறவிகளின் பெருமை, சான்றோர் நூலில் விருப்பமுடனும், உயர்வாகவும் இடம்பெரும்.

The settled rule of every code requires, as highest good,
Their greatness who, renouncing all, true to their rule have stood. (translated by Dr. G.U.Pope)

The end and aim of all treatise is to extol beyond all other excellence, the greatness of those who, while abiding in the rule of conduct peculiar to their state, have abandoned all desire.

ஒழுக்கத்தில் உறுதியானவரையே வள்ளுவர் துறவி என்று அழைக்கிறார். அவ்வாறு உறுதியான ஒழுக்கமுடையோரின் பெருமை என்றும் சான்றோரினால் உயர்வாகப் போற்றப்படும்.

Those who have good conduct are considered as saints by Valluvar.. Those who have good conduct will be in good books of the scholars..

Tuesday, October 14, 2008

பிரிவு !!





ஆரம்பம் என்று இருக்கையில்

முடிவு என்றும் இருக்கும்
ஆனால் நட்பில் மட்டும்
ஆரம்பமும் இல்லை
முடிவும் இல்லை
அன்று சந்தித்தோம்
இன்று பிரிகிறோம்
நம் நட்பு என்றும் பிரியாது
என்றும் நாம் இணைந்திருப்போம்!!!


From : http://ninaivellam.blogspot.com/

தோளில் சாயவா!



கண்ணீர்
துடைக்கும் கைகளாய்
துயரங்கள்
தாங்கும் நெஞ்சமாய்
வலிகள்
சுமக்கும் தோள்களாய்
பிரிவை
ஏற்கும் இதயமாய்
மாறிடவா!
புன்னகை மட்டும்
அர்ச்சனையாய்
இன்பங்கள் மட்டும்
வரங்களாய்
அன்பு மட்டும்
பூங்கொத்துகளாய்
யாசிக்கவா!

From : http://ninaivellam.blogspot.com/

திருக்குற‌ள்..

வேண்டுதல் வேண்டாமை இலானடி சேர்ந்தார்க்கு
யாண்டும் இடும்பை இல. 1.1.4


His foot, 'Whom want affects not, irks not grief, 'who gain
Shall not, through everytime, of any woes complain. (Translation by Dr.G.U. Pope)

Those who meditate the feet of Him who is void of desire or aversion, evil shall never come.

விருப்புவெறுப்பற்ற சமநோக்கு எண்ணமுடையோரைப் பின் பற்றினால் என்றும் துன்பம் இல்லை..

From : http://podhumarai.blogspot.com/

Hello Friends,

Here is the world for our creation, so create the friendship & the moments.