Thursday, December 25, 2008

நட்பு

நட்பில் கவலைக்கு இடமில்லை

சோற்றுக்கு வழி இல்லாத போதும்
சுருட்டுக்கு மட்டும் பஞ்சமில்லை

வகுப்பு ஏட்டில் பெயர் இருக்கிறது, ஆள் யார்?
அது வாத்தியருக்கு விளங்கவில்லை

ஆறு மாதம் முக்கி முக்கி படிக்க வேண்டியதை
ஒரே இரவில் எப்படி படித்தோமோ தெரியவில்லை

ஒரே வண்டியில் நான்கு பேர் சென்று
சறுக்கி விழுந்த போது வலி தெரியவில்லை

எதையும் நண்பணிடத்தில் மறைத்ததில்லை
சுற்றுச் சூழலை நினைத்ததில்லை

பல மொழிகள் பேசும் மாணவர்கள் இருந்தாலும்
நட்புக்கு மட்டும் மொழி இருந்ததில்லை

வகுப்பை தவிர கல்லூரியின் மற்ற இடங்களில்
நாம் கால் வைக்காத இடமில்லை

வந்த முதல் நாளில், தெரிந்தவர் தவிர
வேறொருவருடன் பேசி நினைவில்லை

ஒரே வாரத்தில் மாமன் மச்சான் உறவு
எங்கிருந்து வந்ததோ தெரியவில்லை

விடுமுறை விட்டாலும், வீடு திரும்பவில்லை
நட்புக்கு மட்டும் என்றும் விடுமுறையில்லை

இப்படியெல்லாம் பழகிய நமக்கு இன்று
யார் யார் எங்கிருக்கிறோம் என்பதே தெரியவில்லை



From a Forward Mail

8 comments:

நட்புடன் ஜமால் said...

"நட்பு" எந்திரனையும் மனிதனாய் மாற்றும் மந்திரம்.

நட்புடன் ஜமால் said...

\\பல மொழிகள் பேசும் மாணவர்கள் இருந்தாலும்
நட்புக்கு மட்டும் மொழி இருந்ததில்லை \\

உண்மை.

நட்புடன் ஜமால் said...

\\நட்புக்கு மட்டும் என்றும் விடுமுறையில்லை இப்படியெல்லாம் பழகிய நமக்கு இன்று
யார் யார் எங்கிருக்கிறோம் என்பதே தெரியவில்லை\\

ஜூப்பர்.

மிக அருமை.

நண்பா நண்பா என்று சொல்லிதிரிந்தோம்

வேறு ஒரு வாழ்க்கை தேடி நாம்
பறந்தோம்

நட்புடன் ஜமால் said...

please remove word verification

goto dashboard

settings

comments

show word verification "no"

Busy said...

//அதிரை ஜமால் said...

"நட்பு" எந்திரனையும் மனிதனாய் மாற்றும் மந்திரம்.//


Sariyaka sonneerkal,

Thnks for ur kind information Jamal

Anonymous said...

விடுமுறை விட்டாலும், வீடு திரும்பவில்லை
நட்புக்கு மட்டும் என்றும் விடுமுறையில்லை

Anonymous said...

நம்பிக்கையின்
தோழன்
நட்பு
r4

Busy said...

Thanks Rathnasamy